உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஹார்ட் பீட்' வெப்சீரிஸிலிருந்து விலகிய யோகலட்சுமி

'ஹார்ட் பீட்' வெப்சீரிஸிலிருந்து விலகிய யோகலட்சுமி

'சிங்கப்பெண்ணே' தொடரில் காயத்ரி கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர் யோகலட்சுமி. 'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் மூலம் சினிமாவிலும் அறிமுகமானர். ஓடிடி வெப் தொடரான 'ஹார்ட் பீட்'டில் டாக்டர் தேஜஸ்ரீயாக நடித்தார். முதல் இரண்டு சீசன்களிலும் அவர் நடிப்பு பேசப்பட்டது. தற்போது மூன்றாவது சீசன் தயாராகி வருகிறது. இந்த நிலையில் தொடரில் இருந்து விலகி இருக்கிறார் யோகலட்சுமி.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்த செய்தியை ஏற்றுக்கொள்வது உங்களுக்கு கடினமாக இருக்கும் என்பதை அறிவேன். உண்மையிலேயே வருந்துகிறேன். இனி நான் 'ஹார்ட் பீட்' தொடரின் ஒரு பகுதியாக இருக்கப்போவதில்லை. இது எனக்கும் எளிதான முடிவு அல்ல. ஆனால், இந்த வாய்ப்புக்காக நான் எப்போதும் நன்றியுள்ளவளாக இருப்பேன்.

என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி. 'தேஜு' கதாபாத்திரம் எப்போதும் எனக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும். இந்த பயணத்தை மறக்க முடியாததாக மாற்றிய 'ஹார்ட் பீட்' குழுவினருக்கும், தொடக்கம் முதல் ஆதரித்து வந்த ரசிகர்களுக்கும் நன்றி. உங்களின் அன்பும் ஆதரவும் தனது வாழ்நாள் முழுவதும் மனதில் இருக்கும், என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் விலகியதற்கான காரணத்தை குறிப்பிடவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !