ஆகஸ்ட் 14 ரிலீஸ் மும்முனை போட்டியாக மாறுகிறதா
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ இணைந்து நடித்துள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' வருகின்ற ஆகஸ்ட் 14ம் தேதியன்று திரைக்கு வருகிறது.
பெரும்பாலும் சூர்யா போன்ற பெரிய நடிகரின் படங்கள் வெளியாகும் போது போட்டிக்கு எந்தவொரு படங்களும் வராது. ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா இணைந்து நடித்துள்ள 'ஹாய்' படம் . ஆகஸ்ட் 14ம் தேதியன்று திரைக்கு வருகிறது என அறிவித்தனர். சரி விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் ஹாய் படத்திற்கு வரலாம்.
இந்த நிலையில் இந்த இரண்டு படங்களுடன் மூன்றாவதாக விஷால் இயக்கி, நடித்துள்ள 'மகுடம்' படமும் ஆகஸ்ட் 14ம் தேதியை குறி வைத்துள்ளனர். ஒருவேளை மகுடம் படம் ஆகஸ்ட் 14ம் தேதியன்று திரைக்கு வந்தால் தியேட்டர்கள் மூன்று படங்களுக்கும் பிரியும், குறிப்பாக கருப்பு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திற்கு கருப்பு பட அளவிற்கு தியேட்டர்கள் கிடைக்காது குறையும் என தியேட்டர் அதிபர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.