உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவை கிண்டலடிக்கும் விதமாக பேசினாரா இளம் மலையாள நடிகர் ?

முதல்வர் விஜய்யின் பதவியேற்பு விழாவை கிண்டலடிக்கும் விதமாக பேசினாரா இளம் மலையாள நடிகர் ?

மலையாளத் திரையுலகில் சமீபத்தில் மறைந்த நடிகர் சீனிவாசனின் மகன்களான வினீத் சீனிவாசன் மற்றும் தியான் சீனிவாசன் இருவருமே நடிகர்களாகவும், இயக்குனர்களாகவும் வலம் வருகின்றனர். இதில் இளையவரான தியான் சீனிவாசன், நயன்தாரா - நிவின் பாலி நடித்த 'லவ் ஆக்ஷன் டிராமா' என்ற படத்தை இயக்கியவர். தற்போது இவரது நடிப்பில் உருவாக இருக்கும் 'விசிட்டர்' என்கிற படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இந்தப் படத்தில் கதாநாயகியாக நவ்யா நாயர் நடிக்கிறார். எப்போதுமே நகைச்சுவையாகப் பேசுகிறேன் என்று சில நேரங்களில் சர்ச்சைக் கருத்துக்களைத் தன்னை அறியாமல் கூறி மாட்டிக்கொள்பவர் தான் தியான் சீனிவாசன்.

அந்தவகையில் இந்தப் பூஜையின் போது அவர் பேசுகையில் நவ்யா நாயரைப் பார்த்து, நான் முதல்வராகப் பதவியேற்கும் நாளில் நவ்யா நாயர் முன் வரிசையில் அமர்ந்திருக்க வேண்டும். அதுவும் அவர் புடவை அணிந்து, கண்களில் கண்ணீருடன் அந்த விழாவில் அமர்ந்திருக்க வேண்டும் என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். ஆனால் இது கேரளாவில் இருக்கும் விஜய் ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. காரணம், தமிழகத்தில் விஜய் முதல்வராகப் பதவியேற்ற விழாவில் நடிகை திரிஷா கலந்து கொண்டதைக் குறிப்பிடுவது போல இவர் பேசியிருக்கிறார் என்று கூறி, தியான் சீனிவாசனுக்குத் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !