'ரிவர்ஸ்' அடித்த 2 படங்கள் : நாளை 4 படங்கள் ரிலீஸ்
ஜூலை 17ம் தேதி நாளை வெள்ளிக்கிழமை வெளியாகும் படங்கள் என கடந்த வாரங்களிலேயே அறிவிக்கப்பட்ட படங்கள் “அர்ஜுனன் பேர் பத்து, அருள்வான், அன்பே டயானா, டார்க் ஹெவன், கண் இமைக்கும் நேரத்தில், நாடோடி கூட்டம்”.
இவற்றில் 'அர்ஜுனன் பேர் பத்து' படம் ஏற்கெனவே வெளியீட்டிலிருந்து பின் வாங்கியது. நேற்று 'டார்க் ஹெவன்' படமும் தள்ளிப் போவதாக அறிவித்துள்ளனர். விஜய்யின் 'ஒன் லாஸ்ட் டான்ஸ்' திரையில் காண ஆவலாக இருக்கிறோம் என 'ரிவர்ஸ்' அடித்துவிட்டனர்.
அன்பே டயானா' படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று நடைபெற்றது. இன்று 'அருள்வான்' படத்தின் பத்திரிகையாளர் காட்சி நடைபெற உள்ளது.
அதனால் நாளை ஜூலை 17ல், “அருள்வான், அன்பே டயானா,” ஆகிய படங்கள் உறுதியாகிவிட்டது. மற்ற இரண்டு படங்கள் வருமா என்பது நாளை தெரிந்துவிடும்.
ஜூலை 23ல் 'ஜனநாயகன்' வெளியீடு அறிவிக்கப்பட்ட நிலையில் நாம் ஏற்கெனவே சொன்னபடி ஜூலை 24 மற்றும் ஜூலை 31ல் வெளியாக உள்ள படங்கள் தள்ளிப் போகலாம். அதனால், ஆகஸ்ட் மாத வெளியீடுகளில் கூட மாற்றம் வரலாம்.