டாக்சிக் : நடிகர், நடிகைகளின் சம்பளம் மட்டுமே 100 கோடியா?
'கேஜிஎப், காந்தாரா' படங்களுக்குப் பிறகு கன்னடத் திரையுலகத்தில் தற்போது தயாராகி, ஆகஸ்ட் 26ல் வெளியாக உள்ள 'டாக்சிக்' படத்தின் பட்ஜெட் சுமார் 500 கோடிக்கும் அதிகம் என்கிறார்கள்.
இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் யஷ் அவருடைய சம்பளமாக 50 கோடி மற்றும் லாபத்தில் பங்கு என்று கேட்டுள்ளாராம். படம் ஓடினால் அவருக்கு மிகப் பெரும் தொகை சம்பளமாகக் கிடைக்கும்.
படத்தில் முக்கிய நடிகைகள் சிலர் நடித்துள்ளார்கள். அவர்களில் கியாரா அத்வானிக்கு 15 கோடி, நயன்தாராவுக்கு 12 கோடி, ருக்மணி வசந்திற்கு 5 கோடி, ஹுமா குரேஷிக்கு 3 கோடி, தாரா சுட்டாரியாவுக்கு 2 கோடி சம்பளமாகத் தரப்பட்டுள்ளது என்கிறார்கள்.
படத்தை இயக்கியுள்ள கீது மோகன்தாஸ் லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில் சம்பளம் பேசியிருக்கிறாராம்.
விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தைத் தயாரித்துள்ள கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம்தான் இப்படத்தைத் தயாரித்துள்ளது.