உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'அவ்வை சண்முகி' படத்தினால் கமலுக்கு அடித்த ஜாக்பாட்!

'அவ்வை சண்முகி' படத்தினால் கமலுக்கு அடித்த ஜாக்பாட்!


தயாரிப்பாளர் எச்.முரளி, அவ்வை சண்முகி படத்தை தயாரித்தார். இது அல்லாமல் 'பில்லா, மெர்சல்' ஆகிய படங்களில் இணை தயாரிப்பாளர் ஆக பணியாற்றியவர்.

சமீபத்தில் எச். முரளி அளித்த பேட்டியில் அவ்வை சண்முகி படத்தில் கமலின் சம்பளத்தை பற்றி சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதன்படி, 1996ம் ஆண்டில் 'இந்தியன்' படம் தயாரிப்பில் இருந்த போது அவ்வை சண்முகி படத்தை கமல்ஹாசன் சாரை வைத்து தயாரிக்க ஒப்பந்தம் செய்தேன். அப்போது கமல் சார் இந்தியன் படத்திற்காக எனக்கு ரூ. 1.5 கோடி சம்பளமாக தந்துள்ளனர். நீங்கள் ரூ. 1.5 கோடி சம்பளமாக தர முடியுமா அல்லது நான்கு ஏரியா விநியோக உரிமையை தர முடியுமா? என கேட்டார். நான் சென்னை சிட்டி, கேரளா, கர்நாடக, ஓவர்சீஸ் என நான்கு ஏரியா விநியோக உரிமையை கமல் சாருக்கு சம்பளமாக தந்தேன். அவ்வை சண்முகி வெளியாகி வெற்றி பெற்ற பிறகு, அந்த நான்கு ஏரியாகளில் இருந்து கமல் சாருக்கு ரூ. 5 கோடி ஷேர் ஆக கிடைத்தது என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !