உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமெரிக்காவில் திரைப்பட விருதுகள், இசை நிகழ்ச்சிகளுடன் துவங்கும் 'தமிழ் அமைப்பு மாநாடு'

அமெரிக்காவில் திரைப்பட விருதுகள், இசை நிகழ்ச்சிகளுடன் துவங்கும் 'தமிழ் அமைப்பு மாநாடு'


வட அமெரிக்காவில் உள்ள தமிழ் சங்கங்களை இணைக்கும் '' வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை(FETNA) வும் நியூ ஜெர்சி தமிழ்ப் பேரவையும் இணைந்து பேரவையின் 39 வது தமிழ் விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளன. நியூஜெர்சியில் உள்ள நியூஜெர்சி கன்வென்சன் மற்றும் எக்ஸ்போசிசன் மையத்தில் வரும் இன்று (ஜூலை 2) முதல் மூன்று நாட்களுக்கு இவ்விழா நடக்க உள்ளது. தமிழகத்தை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.

நிகழ்ச்சிகள் அனைத்தும் அமெரிக்க நேரப்படி காலை 8 மணிக்கு துவங்குகிறது. முதல்நாளான இன்று, தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கும் நிகழ்ச்சியில், சமீபத்தில் மறைந்த இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோருக்கு நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது. தொடர்ந்து பேரவை குறும்பட விருதுகள் வழங்கப்படுகின்றன. இது வட அமெரிக்க தமிழ் குறும்படம், சர்வதேச தமிழ் குறும்படம் ஆகிய பிரிவுகளில் வழங்கப்பட இருக்கின்றனர். இதற்கிடையே இசையும், நடனமும் என்ற இன்னிசை நடன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

பின்னர் சர்வதேச அளவில் வெளியிடப்படாத முழுநீள திரைப்படங்களில் சிறந்தவற்றிற்கு விருதுகளும் வழங்கப்படுகிறது. மேலும், திரைப்பட சாதனையாளர் விருதுகள், சிறந்த இயக்குனர், சிறந்த திரைப்படம் ஆகியவற்றிற்கான பேரவை மக்கள் தேர்வு விருதுகள் கொடுக்கப்பட இருக்கின்றன.
இதில், கலைமாமணி இசைக்கவி ரமணன் தலைமையில் 'காலங்களில் அவன் வசந்தம்' எனும், கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு சிறப்பு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இது இந்திய நேரப்படி நாளை காலை 8 மணிக்கு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !