உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரு வழியாக ஜூலை 16ல் ரிலீசாகும் 'வரவு'

ஒரு வழியாக ஜூலை 16ல் ரிலீசாகும் 'வரவு'

மலையாளத்தில் வில்லன் நடிகராக இருந்து குணச்சித்திர நடிகராக மாறி, தற்போது கதையின் நாயகனாக பல படங்களில் நடித்து வருபவர் நடிகர் ஜோஜு ஜார்ஜ். குறிப்பாக, இவர் நடித்த 'ஜோசப்' மற்றும் பணி' ஆகிய படங்கள் மலையாளத்தைத் தாண்டி தமிழ் ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இவர் தமிழில் 'ஜகமே தந்திரம்', 'தக் லைப்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில் தற்போது 'வரவு' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் ஜோஜு ஜார்ஜ். பிரபல கமர்சியல் இயக்குனரான ஷாஜி கைலாஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஏற்கனவே மே-1 மற்றும் ஜூன் 12 ஆகிய தேதிகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு தள்ளிப் போன நிலையில், தற்போது ஜூலை 16-ம் தேதி உறுதியாக ரிலீஸ் ஆக இருக்கிறது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ரசிகர்களுக்குச் சிறந்த சினிமா அனுபவத்தைத் தரவே இந்த தாமதம் ஏற்பட்டது என்று படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளார்கள். மிகப்பெரிய செல்வந்தரான ஜோஜு ஜார்ஜ், சிறை தண்டனை முடிந்து சொந்த ஊருக்கு வரும்போது கடந்த காலங்களில் நிலுவையில் இருந்த பிரச்சனைகளை அவர் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !