உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரீல் மாமனாருக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ரீல் மருமகன்

ரீல் மாமனாருக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ரீல் மருமகன்


இந்திய சினிமாவில் திரைக்கதை ஜாம்பவான் என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் நேற்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு திரையுலகைச் சேர்ந்தவர்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. தமிழ் திரையுலகைத் தாண்டி மலையாள திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் மம்முட்டி, ஜெயராம், திலீப் ஆகியோர் பாக்யராஜின் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இதில் ஜெயராம் சென்னையில் வசிப்பவர். மம்முட்டி சமீபத்தில் தனுஷின் படப்பிடிப்பிற்காகச் சென்னையில் தான் முகாமிட்டுள்ளார்.

அதே போல தனது பட வேலைகள் தொடர்பாக சென்னையில் தங்கி இருக்கும் நடிகர் திலீப்பும் இந்த இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டுள்ளார். கடந்த 2012ல் மலையாளத்தில் திலீப் நடிப்பில் வெளியான 'மிஸ்டர் மருமகன்' படத்தின் மூலம் தான் நடிகர் பாக்யராஜ் முதல் முறையாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார். அந்தப் படத்தில் திலீப்புக்கு மாமனாராக நடித்திருந்தார் பாக்யராஜ். அப்போது ஏற்பட்ட அந்த நட்பின் அடிப்படையில் தான், திலீப் சென்னைக்கு நேரில் வந்து பாக்யராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !