ரஜினி, கமல் படத்தில் நான் இல்லை: ஸ்ருதிஹாசன் விளக்கம்!
ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இதன் புரோமோ வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் படப்பிடிப்பை ரஜினி தனது 173வது படத்தை முடித்த பிறகு தான் துவங்கவுள்ளார். இதற்கிடையில் கமலும், அன்பறிவு இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார் என தகவல் பரவியது. இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் ஸ்ருதிஹாசனிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு ஸ்ருதிஹாசன் கூறியதாவது, இல்லை இல்லை, நான் கமல், ரஜினி படத்தில் இல்லை. ஆனால், அனைவரும் மாதிரி நானும் இப்படத்தின் மீது ஆர்வமாக இருக்கிறேன். நெல்சன் சார் என்ன பண்ண போகிறார் என, நானும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன். அப்பாவின் ரசிகர்களுக்கு தெரியும், நான் கூலி படத்திற்கு பின் ரஜினிகாந்த் சாரின் பெரிய ரசிகையாக மாறிவிட்டேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.