உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நான் ஓரினச்சேர்க்கையாளரா?: மவுனி ராய் விளக்கம்

நான் ஓரினச்சேர்க்கையாளரா?: மவுனி ராய் விளக்கம்


'நாகினி' சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மவுனி ராய். மாடல் அழகியான இவர், ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். 2022ல் திருமணம் செய்த அவர், சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் தனது விவாகரத்தை அறிவித்தார். சில மாதங்களாக இவர் ஓரினச் சேர்க்கையாளர் என்ற தகவல் பரவியது.

இதுப்பற்றி யுடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் மவுனி ராய், ''என்னை பற்றி நான் கேள்விப்பட்ட பெரிய வதந்தி, நான் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்பதுதான். எந்த சூழ்நிலையிலும் ஒரு பாறையைப் போல உறுதுணையாக நின்ற நண்பர்களும் குடும்பத்தினரும் கிடைத்தது என் அதிர்ஷ்டம். எனக்கு ஆதரவளிக்க எப்போதும் சிறந்த தோழிகள் இருக்கிறார்கள். எனது நல்ல, கெட்ட மற்றும் மோசமான காலகட்டங்களில் அவர்கள் என்னுடன் இருந்திருக்கிறார்கள். உங்களை உற்சாகப்படுத்தும் அதுபோன்ற பெண்கள் உங்கள் வாழ்க்கையில் இருப்பது மிகவும் அவசியம். என் தோழிகள் மிகச் சிறந்தவர்கள்'' எனக் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !