உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சொன்னதைச் செய்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா

சொன்னதைச் செய்த விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா


நடிகர் விஜய் தேவரகொண்டா குடும்பத்தினர் 'தி தேவரகொண்டா அறக்கட்டளை' என்ற பெயரில் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் கோவிட் காலத்திலும் நிறைய உதவிகளைச் செய்தது. அடுத்து கல்வியிலும் உதவி செய்ய இறங்கியுள்ளார்கள்.

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் திருமணம் செய்து கொண்ட பின் விஜய்யின் சொந்த ஊருக்குச் சென்றிருந்தார்கள். தெலுங்கானா மாநிலம் அச்சம்பேட் மண்டலத்தில் தும்மன்பேட் என்ற ஊர்தான் அவரது அப்பா பிறந்த ஊர்.

அந்த கிராமத்தில் அவர்களது திருமண வரவேற்பின் போது நல்ல மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு உதவி செய்வோம் என்று அறிவித்தார்கள். அதன்படி இன்று அந்த உதவியை வழங்கியிருக்கிறார்கள்.

அச்சம்பேட் மண்டலத்தில், 9 மற்றும் 10வது வகுப்புகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த, நல்ல மதிப்பெண்கள் பெற்ற 180 மாணவ, மாணவியருக்கு இன்று அந்த உதவியை வழங்கி உள்ளார்கள்.

நிகழ்ச்சியில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா மற்றும் அவர்களது ரசிகர்கள் விழாவில் கலந்து கொண்டார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !