உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா, சூரி மோதலை தடுத்த நெட்பிளிக்ஸ்!

சூர்யா, சூரி மோதலை தடுத்த நெட்பிளிக்ஸ்!


வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ இணைந்து நடித்துள்ள படம் ' விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'. இந்த படம் இவ்வருட ஆகஸ்ட் 14ந் தேதியன்று சுதந்திர திர வார விடுமுறையை குறிவைத்து திரைக்கு வருகிறது.

இதே தேதியில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, சுஹாஸ் இணைந்து நடித்துள்ள 'மண்டாடி' படத்தை வெளியிடுகின்ற திட்டத்தில் இருந்தனர். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு மண்டாடி படம் வருகின்ற செப்டம்பர் 4ம் தேதியன்று திரைக்கு வருகிறது என அறிவித்தனர்.

இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து நாம் விசாரித்தபோது நமக்கு கிடைத்த தகவலின் படி, விஸ்வநாத் அண்ட் சன்ஸ், மண்டாடி என இந்த இரண்டு படங்களின் டிஜிட்டல் உரிமையும் நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் பெரும் தொகைக்கு கைபற்றியுள்ளனர். இதனால் இந்த இரண்டு படங்களும் ஒரே தேதியில் திரைக்கு வந்தால் ஒளிபரப்பு செய்வதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளது என்பதால் நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்தின் அறிவுரையால் தான் மண்டாடி படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !