உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 13 வருடங்களுக்கு பிறகு தயாரிப்பிற்கு திரும்பும் ஜெமினி!

13 வருடங்களுக்கு பிறகு தயாரிப்பிற்கு திரும்பும் ஜெமினி!

ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தமிழில் 'வசூல்ராஜா, குட்டி, மயக்கம் என்ன, நண்பன், கடல், மதகஜராஜா' உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளனர். இவை அல்லாமல் பல படங்களை விநியோகம் செய்துள்ளனர்.

ஜெமினி நிறுவனம் பைனான்ஸ் பிரச்னையில் சிக்கிக் கொண்டதால் அந்நிறுவனம் தயாரித்த மதகஜராஜா படம் 12 வருடங்கள் நிலுவையில் இருந்து கடந்த ஆண்டு தான் திரைக்கு வந்தது.

இந்த நிலையில் 13 வருடங்களுக்கு பிறகு ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் மீண்டும் பட தயாரிப்பில் களமிறங்குகின்றனர். இந்த படம் சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. இதில் சுபாஷ் சந்திர போஸ் ஆக ஏவிஎம் குடும்பத்தை சேர்ந்த ஆர்யன் ஷியாம் என்பவர் நடிக்கவுள்ளார். இதற்காக அவர் கட்டுமஸ்தான உடலமைப்பை மெருகேற்றி உள்ளார். இந்த படத்தை ஆனந்த் பிரசாத் என்பவர் இயக்கவுள்ளார். சமீபத்தில் இதற்கான போட்டோ ஷூட் பணிகளும் நிறைவு பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !