உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நெல்சனை அணுகிய சூர்யா தரப்பு!

நெல்சனை அணுகிய சூர்யா தரப்பு!


நடிகர் சூர்யா 'கருப்பு' படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அடுத்து ரிலீஸூக்கு தயாராக 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் உள்ளது. இப்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா தனது 47வது படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு அடுத்த படமாக சூர்யாவின் 48வது படத்தை தா. சே. ஞானவேல் இயக்கவுள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இப்போது சூர்யாவின் 50வது படத்தை யார் இயக்குவார் என்பது பலரின் கேள்வியாக உள்ளது. சமீபத்தில் தெலுங்கு இயக்குனர் அனில் ரவிபுடியின் பெயர் கூட பேசப்பட்டது.

இந்த நிலையில் சூர்யா தரப்பில் இருந்து இயக்குனர் நெல்சனை அணுகியுள்ளனர். சூர்யாவின் 50வது படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும் என ஒரு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர். ஆனால், நெல்சன் 'ஜெயிலர் 2' பட இறுதிகட்ட பணியில் உள்ளார். இதைத்தொடர்ந்து ரஜினி, கமல் என இருவரும் இணைந்து நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார். ஏற்கனவே நெல்சனுக்கு தெலுங்கில் ஜூனியர் என்டிஆரை வைத்து இயக்க வேண்டிய ஒப்பந்தம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த ஒப்பந்தங்கள் மனதில் வைத்து தான் நெல்சன், சூர்யா படத்தை இயக்க முடியுமா என்பதை கூறுவார் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !