உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாரதிராஜா மறைவு : பிரதமர் மோடி அனுப்பிய இரங்கல் கடிதம்

பாரதிராஜா மறைவு : பிரதமர் மோடி அனுப்பிய இரங்கல் கடிதம்

இயக்குனர் இமயம் என தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட பாரதிராஜா உடல்நலக் குறைவால் சென்னையில் இரு தினங்களுக்கு முன் தனது 84 வயதில் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் தேனி, பெரியகுளம், காட் ரோட்டில் உள்ள அவரது பண்ணை தோட்டத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. பாரதிராஜா மறைவுக்கு ஏற்கனவே எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் பாரதிராஜாவின் மனைவி சந்திரலீலாவிற்கு இரங்கல் கடிதம் ஒன்றை பிரதமர் மோடி அனுப்பி உள்ளார்.

அதில், ‛‛பாரதிராஜாவின் மறைவு வார்த்தைகளால் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது படைப்புகள் தமிழ் மக்களின் மனங்களை வென்றவை. கிராமப்புற வாழ்வியலை அதன் தன்மை மாறாமல் தத்ரூபமாக காட்சிப்படுத்தியவர். திரையுலகில் அவரது பங்களிப்பு என்றும் நினைவுகூறப்படும். இந்த இழப்பை தாங்கிக் கொள்ளவும் குடும்பத்தினர் மன வலிமை பெறவும் வேண்டுகிறேன்'' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !