உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்?

லலித் மோடியின் பயோபிக்கில் நடிக்கிறாரா ரன்வீர் சிங்?


ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முன்னாள் தலைவராக பொறுப்பு வகித்தவர் லலித் மோடி. சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிம் அச்சுறுத்தல் காரணமாகவே கிரிக்கெட்டில் இருந்து நிரந்தரமாக விலகியதாக ஒரு தகவலை வெளியிட்டு அதிர்ச்சியை கொடுத்தார். இந்த நிலையில் பாலிவுட் சினிமா ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் தகவலாக தன்னுடைய சுயசரிதை படமாக உருவாக இருக்கிறது என்றும், அதில் ஒருவேளை ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார் லலித் மோடி.

தற்போது இவரது சுயசரிதைக்காக திரைக்கதை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு லண்டனில் முதன்முறையாக தன்னை ரன்வீர் சிங் சந்தித்ததாகவும், அந்த சந்திப்பின்போது தன் வாழ்நாளில் ஆவலோடு நடிக்க விரும்பும் ஒரே ஒரு கதாபாத்திரம் என்றால் அது லலித் மோடியின் கதாபாத்திரம் தான் என்று தன்னிடம் கூறியதாகவும் லலித் மோடி தற்போது கூறியுள்ளார். ஆனால் இந்த இரண்டு வருடங்களில் துரந்தர் படத்தின் வெற்றி மூலம் மிகப்பெரிய உயரத்திற்கு ரன்வீர் சிங் சென்றுவிட்டார் என்றும், தற்போதும் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அவர் ஆவலாக இருக்கிறாரா என்பது தெரியவில்லை என்றும், அவரிடம் இது குறித்து பேசப்படும் என்றும் கூறியுள்ளார் லலித் மோடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !