கருப்பு - தமிழக வசூல் 175 கோடி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ADDED : 5 hours ago
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யா, திரிஷா மற்றும் பலர் நடிப்பில் மே 15ம் தேதி வெளியான படம் 'கருப்பு'. இப்படம் தற்போது 175 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக தமிழக வினியோகஸ்தரான சக்தி பிலிம் பேக்டரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
படம் வெளியான 3 நாட்களில் 60 கோடி, 4 நாட்களில் 80 கோடி, 7 நாட்களில் 100 கோடி, 10 நாட்களில் 130 கோடி, 13 நாட்களில் 150 கோடி, 20 நாட்களில் 175 கோடி வசூலித்துள்ளதாக இதுவரையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
இப்படம் எதிர்பார்க்காத அளவில் தமிழகத்தில் வசூலைக் குவித்து வருகிறது. மூன்று வாரங்களைக் கடந்து தற்போதும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னும் எஞ்சியுள்ள நாட்களில் 25 கோடி வசூலித்து 200 கோடியைக் கடக்குமா என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.