உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பெத்தி ரிலீஸ் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஜான்வி கபூர்

பெத்தி ரிலீஸ் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஜான்வி கபூர்

தமிழ், தெலுங்குத் திரையுலகத்தில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. அவரது மகள் ஜான்வி கபூர் நடித்த தெலுங்குப் படமான 'பெத்தி' இன்று வெளியாகி உள்ளது.

அதை முன்னிட்டு இன்று திருப்பதி ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் சித்தி மகேஸ்வரி உடன் சென்றுள்ளார். ஜான்வி கபூர் திருப்பதி கோயிலுக்கு அடிக்கடி வரும் பழக்கமுடையவர்.

சமயங்களில் நடைபாதை வழியாக நடந்து வந்தும் தரிசனம் செய்வார் ஜான்வி கபூர். நேற்று இரவு அலிபிரி நடைபாதை வழியாக நடந்தே சென்று இன்று காலையில் பெருமாளை வழிபட்டுள்ளார்.

ஹிந்திப் படங்களில் நடித்து வந்த ஜான்வி, 2024ல் ஜுனியர் என்டிஆர் ஜோடியாக 'தேவரா' படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு அவர் நடித்துள்ள இரண்டாவது தெலுங்குப் படம்தான் 'பெத்தி'. இப்படத்தில் அச்சியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நேற்று முன்தினம் நடந்த இப்படத்தின் முன் வெளியீட்டு விழாவில் தெலுங்கில் பேசி ரசிகர்களைக் கவர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !