உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மகன் பட அறிவிப்பும் வந்தாச்சு, அப்பா பட அறிவிப்பு எப்போது வரும் ?

மகன் பட அறிவிப்பும் வந்தாச்சு, அப்பா பட அறிவிப்பு எப்போது வரும் ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை, அவரது ரசிகர்கள், கட்சியினர் சொல்வது போல 500 கோடி ரூபாய் வருவாயை விட்டு அரசியலுக்குச் சென்று தமிழக முதல்வராகிவிட்டார் விஜய். அவரது கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தைப் பார்க்க அவரது ரசிகர்கள் கடந்த ஐந்து மாதங்களாகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அவர் முதல்வர் பதவியேற்ற பிறகாவது தணிக்கை சான்றிதழ் தந்துவிடுவார்கள் என்று பார்த்தால் அது பற்றிய எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படம் வெளியாகும் என்றும் ஒரு தகவல், ஆனால், அதுவும் இன்னும் உறுதியாகவில்லை.

இதனிடையே, விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் 'சிக்மா' படத்தின் வெளியீடு ஜூலை 31 என்று அறிவித்துவிட்டார்கள். அப்படியே 'ஜனநாயகன்' தயாரிப்பாளர் அப்பா விஜய்யின் பட வெளியீட்டுத் தேதியையும் அறிவித்துவிடலாம்.

அப்பாவின் கடைசி படமும், மகனின் முதல் படமும் அடுத்தடுத்து வந்தால் ஆச்சரியமாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !