வாசகர்கள் கருத்துகள் (1)
இந்த லட்சணத்தில் போலீசார் இருக்கின்றார்கள். பரோலில் இருந்து மீண்டும் திரும்பாவிட்டால், பரோலுக்கு வாதாடும் வக்கீல்களுக்கு தண்டனை அளிக்கணும். அப்போதான் இதுபோன்ற சம்பவங்கள் குறையும்.
ஜெயிலில் இருந்து தப்பிக்கும் கைதிகள் தங்களை வெளியுலகிற்கு அடையாளம் காட்டாமல் தலைமறைவாகவே வாழ முயற்சிப்பார்கள்.. ஆனால் குஜராத்தை ஹேமந்த் நகீந்தாஸ் மோடி என்கிற கொலை வழக்குக் குற்றவாளியின் கதை ரொம்பவே சுவாரஸ்யமானது. ஆயுள் தண்டனை கைதியான இவர் 12 வருடங்களுக்கு முன் பரோலில் வந்தபோது தப்பித்து சென்றாலும் முழுமையாக தலைமறைவாகாமல் தனது பெயரை ட்விங்கிள் தேவ் என மாற்றிக்கொண்டு சினிமா மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வந்துள்ளார். மோகன்லால் நடித்த ‛எம்புரான், லாகூர் 1947' உள்ளிட்ட பல படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்துள்ளார் என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சமூக வலைதளங்களிலும் தான் பல்வேறு வேடங்களில் நடித்த புகைப்படங்களை வெளியிட்டு இவர் ஆக்டிவாக இருந்துள்ளார். ஆனாலும் போலீசார் கண்களில் இவர் சிக்கவே இல்லை.. இந்த நிலையில் தான் ஆமதாபாத் குற்றப்பிரிவு போலீசாருக்கு அவர் மீண்டும் சொந்த ஊருக்கு வந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, கீகண்டா மெட்ரோ நிலையம் அருகே கைது செய்யப்பட்டு மீதமுள்ள ஆயுள் தண்டனையை அனுபவிக்க மீண்டும் மெஹ்சானா சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இந்த லட்சணத்தில் போலீசார் இருக்கின்றார்கள். பரோலில் இருந்து மீண்டும் திரும்பாவிட்டால், பரோலுக்கு வாதாடும் வக்கீல்களுக்கு தண்டனை அளிக்கணும். அப்போதான் இதுபோன்ற சம்பவங்கள் குறையும்.