உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள்

'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள்


ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்துள்ள 'கருப்பு' திரைப்படம் பைனான்ஸ் பிரச்னை காரணமாக இன்று ரிலீசாகவில்லை. இந்த நிலையில், மும்பை, புனே, வாரணாசி போன்ற நகரங்களில் உள்ள தியேட்டர்களில் படம் ரிலீசானது. அங்கிருந்த தியேட்டர்களில் எடுக்கப்பட்ட படத்தின் சில காட்சிகள் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பதிவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த படக்குழு விசாரித்ததில், அனுமதி இன்றி க்யூப் நிறுவனம் அப்படத்தை வெளியிட்டது தெரியவந்தது.

மற்ற மாநிலங்களில் அனுமதியின்றி க்யூப் நிறுவனம் படத்தை வெளியிட்டது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சிவா, தாணு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுமார் 140 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கருப்பு படம், மும்பை, புனே, வாரணாசியில் படம் திடீரென ஒளிபரப்பப்பட்டது அதிர்ச்சியாக இருந்தது. உடனடியாக அந்த தியேட்டர்களை கண்டறிந்து தகவல் சொன்னதும், காட்சிகள் நிறுத்தப்பட்டன.

க்யூப் நிறுவனத்தில் படம் பாதுகாப்பாக இருக்கும் என்ற நிலையில், எப்படி படம் அங்கு அனுமதியின்றி ரிலீஸ் ஆனது எனத் தெரியவில்லை. ஜனநாயகன் படம் ரிலீசுக்கு முன்பாகவே இணையத்தில் கசிந்ததுபோல், தற்போது கருப்பு படமும் பைரசி தளங்களில் வெளியாகிவிடுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுப்பற்றி க்யூப் நிறுவனத்திடம் கேட்டதில், ஊழியரின் தவறால் நடந்ததாக சொல்கின்றனர். இதனை கண்டிக்கிறோம். பெரிய நடிகர்களின் படங்களுக்கே இப்படியான நிலை ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் அனைத்து படங்களுக்கும் இதே சூழல் வரலாம். மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டதால், அதற்கான இழப்பீடு கேட்டுள்ளோம். அவர்களின் குழுவுடன் ஆலோசித்து இழப்பீடு வழங்குவதாக கூறியுள்ளனர்.

படம் பற்றிய சிக்கல்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்று இரவுக்குள் படம் ரிலீசாகும் என நம்புகிறோம். அதற்காகதான் போராடி வருகிறோம். பைனான்சியர்களும் இன்றைய சூழலை புரிந்துகொள்ள வேண்டும். 90 கோடி ரூபாய் ஓடிடி வரும் என எதிர்பார்த்தநிலையில் 40 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தே படத்தை ரிலீஸ் செய்கிறோம். இரவுக்குள் நல்ல முடிவு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

சசிக்குமார் திருப்பூர்
2026-05-14 18:19:00

இவர் படத்துக்கு அவ்வளவு ஒர்த் கிடையாது ஓவரா பில்டப் வேண்டாம்