தலாய்லாமாவிடம் குடும்பத்துடன் ஆசி பெற்ற ஜெயராம்
ADDED : 19 hours ago
நடிகர் ஜெயராம் நடிப்பில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தமிழில் தனுஷ் நடித்த 'கர' திரைப்படம் வெளியானது. இதில் ஜெயராமின் வில்லத்தனமான நடிப்பு பாராட்டுகளையும் பெற்றது. இந்த நிலையில் நடிகர் ஜெயராம் தனது மனைவி பார்வதி, மகன் காளிதாஸ் ஜெயராம், மகள் மாளவிகா ஆகியோருடன் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவுக்கு சென்று தலாய்லாமாவை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன. இந்த சந்திப்பு குறித்து ஜெயராம் கூறும்போது, வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு உன்னதமான தருணம் என்றும், தலாய்லாமாவுடன் சில நிமிடங்கள் உரையாடும் வாய்ப்பு தங்களுக்குக் கிடைத்ததாகவும், அவருடைய அமைதியான பேச்சும் ஆசீர்வாதமும் தங்களுக்கு மிகுந்த மன நிறைவை தந்ததாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.