விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளாரே, எப்படி பார்க்கிறீர்கள்? மீடியாக்கள் கேள்விக்கு ரஜினியின் ரியாக்சன்!
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று நீண்ட காலமாகவே எதிர்க்கப்பட்டவர். அதேபோல் கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பு அரசியல் கட்சி தொடங்குவதற்கு தயாரானார். இங்கு சிஸ்டம் சரியில்லை. மொத்த சிஸ்டத்தையும் மாற்ற வேண்டும் என்று கூறி வந்தார். ஆனால் தான் எதிர்பார்த்தபடி ஒரு அலை உருவாகவில்லை என்று ரசிகர்கள் முன்னிலையில் பேசியவர், திடீரென்று கட்சியே தொடங்காமல் பின்வாங்கி விட்டார்.
இந்த நிலையில் இந்த 2026 சட்டசபை தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய விஜய், 2026 சட்டசபைத் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று தற்போது முதல்வராகியுள்ளார். மேலும், இந்த தேர்தலில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தோல்வி அடைந்த நிலையில் அவரை நேரில் சந்தித்தார் ரஜினிகாந்த். இப்படியான நிலையில் விமான நிலையத்தில் ரஜினிகாந்திடம் விஜய் முதல்வராகி இருக்கிறாரே அதை எப்படி பார்க்கிறீர்கள்? என்று மீடியாக்கள் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் அதற்கு எந்த ஒரு பதிலும் கொடுக்காமல், கைகூப்பி சிரித்தபடியே அங்கிருந்து நகர்ந்து சென்று விட்டார் ரஜினிகாந்த். அது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.