உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம்

ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம்

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த திமுக தோல்வி அடைந்த நிலையில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை ரஜினிகாந்த் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இது அப்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரஜினி திமுகவில் இணைய போகிறாரா? தேர்தலின் போது திமுகவிற்கு ஆதரவாக வாய்ஸ் எதுவும் கொடுக்கவில்லையே என்பதற்காக வருத்தம் தெரிவிக்கச் சென்றாரா? என்பது குறித்து பல யூகங்கள் வெளியானது.

இந்த நிலையில் ரஜினி, மு.க.ஸ்டாலினை சந்தித்ததில் எந்த அரசியலும், உள்நோக்கமும் இல்லை என்று ரஜினி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் “ரஜினிகாந்த்தும், மு.க.ஸ்டாலினும் 42 ஆண்டு கால நண்பர்கள். நட்பு ரீதியாக ஸ்டாலினை சந்தித்தார். இதில் எந்த அரசியலும் இல்லை. இதை தேவையில்லாமல் வேறு மாதிரி எதையும் பரப்ப வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Bala
2026-05-13 01:25:45

பயந்துட்டியா கோபாலு..