உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்!

அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்!


'டூரிஸ்ட் பேமிலி' படத்தின் வெற்றிக்குப் பிறகு அபிஷன் ஜீவின்த், 'வித் லவ்' படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இதையடுத்து அபிஷன் ஜீவின்த் மீண்டும் கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஒரு அறிமுக இயக்குனர் தான் இயக்கவுள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தில் அபிஷனுக்கு அப்பா கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் இடம் பெறுகின்றனர். ஒரு நாயகியாக தெலுங்கில் வெளிவந்த 'லிட்டில் ஹார்ட்ஸ்' படத்தில் நடித்த ஷிவானி நகரம் தான் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். மற்றொரு நாயகியாக டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் பிரபலமான யோக லட்சுமி தான் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !