உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'திரிஷ்யம் 2'வில் இடம்பெறாத கலாபவன் சாஜன் 'திரிஷ்யம் 3'ல் ரீ என்ட்ரி

'திரிஷ்யம் 2'வில் இடம்பெறாத கலாபவன் சாஜன் 'திரிஷ்யம் 3'ல் ரீ என்ட்ரி


மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான 'திரிஷ்யம்' மற்றும் அதன் இரண்டாம் பாகம் என இரண்டுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இதனைத் தொடர்ந்து தற்போது இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் வரும் மே 21ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த மோகன்லாலின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் போலீஸ் அதிகாரியான ஆஷா சரத், அவரது கணவர் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் தொடர்ந்தனர். இரண்டாம் பாகத்தில் புதிய போலீஸ் அதிகாரி உள்ளிட்ட சிலர் இணைந்தனர்.. இந்த மூன்றாம் பாகத்திலும் இவர்கள் தொடர்கின்றனர்.

அதே சமயம் முதல் பாகத்தில் மோகன்லாலை டார்ச்சர் செய்யும் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருந்த கலாபவன் சாஜன் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றார். ஆனால் இரண்டாம் பாகத்தில் அவர் இடம்பெறவில்லை. இந்தநிலையில் ஆச்சரியமாகத் தற்போது மூன்றாம் பாகத்தில் அவர் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.. அதேபோல இதில் இன்னொரு புது வரவாக நடிகை வீணா நந்தகுமார் பத்திரிகையாளராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !