உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கொல்லப்பட்ட விலங்கு நல ஆர்வலர் : கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பார்வதி

கொல்லப்பட்ட விலங்கு நல ஆர்வலர் : கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட பார்வதி

சமீபத்தில் திருச்சூரைச் சேர்ந்த சுனிதா என்கிற பெண், பெங்களூருவில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் கைவிடப்பட்ட நாய்களை மீட்டு பராமரிக்கும் ஒரு சமூக ஆர்வலர். பெங்களூருவில் உள்ள ஒரு நாய் காப்பகத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அங்கு பணியாற்றிய இடத்தின் உரிமையாளர் அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த போது, அதை தடுத்து போராடிய நிலையில் சுனிதா கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து பலரும் சுனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு குரல் எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் நடிகை பார்வதி இது குறித்து ஒரு உருக்கமான வீடியோவை கண்ணீருடன் வெளியிட்டுள்ளார்.

தனக்கு தனிப்பட்ட முறையில் சுனிதாவை தெரியும் என்றும், மிகவும் அன்பானவர் என்றும், இந்த செய்தியைக் கேட்டது முதல் தன்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை என்றும் கூறியுள்ளார் பார்வதி. இது இயற்கை மரணம் அல்ல, ஒரு திட்டமிட்ட கொலை என்று குற்றம் சாட்டியுள்ளார். குற்றவாளி இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை, அவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ள பார்வதி, தற்போது சுனிதா பராமரித்து வந்த நாய்களை தத்தெடுக்க விரும்புவோர் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !