உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜயின் இல்லத்திற்கு திடீர் வருகை தந்த த்ரிஷா

விஜயின் இல்லத்திற்கு திடீர் வருகை தந்த த்ரிஷா

நடிகை த்ரிஷாவின் பிறந்த நாளை ஒட்டி இன்று திருப்பதி கோவிலில் சுப்ரபாத தரிசனம் செய்திருக்கிறார். அவரது பிறந்தநாளான இன்றுதான் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் 100 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் இன்று திருமலை கோவிலில் தரிசனம் செய்த திரிஷா அதையடுத்து சென்னையில் உள்ள விஜய்யின் இல்லத்திற்கு சென்றுள்ளார். தனது பிறந்தநாளில் விஜய்யிடம் வாழ்த்து பெற வேண்டும் என்பதோடு தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்பதற்காகவும் திரிஷா அவரது வீட்டிற்கு நேரில் சென்றார். சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக விஜய் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !