உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'தி கோட்' பட கார் எண் வைரல் : வெங்கட் பிரபுவுக்கு நன்றி சொல்லும் தவெகவினர்

'தி கோட்' பட கார் எண் வைரல் : வெங்கட் பிரபுவுக்கு நன்றி சொல்லும் தவெகவினர்

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத ஒரு மாற்றம் இன்றைய தேர்தல் முடிவுகளில் வந்து கொண்டிருக்கிறது. சில விஷயங்களை முன்னரே யூகித்து ஏதோ ஒன்றை செய்திருப்போம். ஆனால், அது பிறகு நிஜத்தில் நடக்கும் போது அதிசயத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும்.

அப்படித்தான் ஒரு விஷயம் நடந்து தற்போது வைரலாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நாயகனாக நடித்து 2024ம் ஆண்டு வெளிவந்த படம் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்', சுருக்கமாக 'தி கோட்'.

அந்தப் பெயரும் கூட இப்போது அரசியலுக்குப் பொருத்தமாக அமைந்துவிட்டது. அந்தப் படத்தில் விஜய்யின் கார் எண்ணாக 'டிஎன் 07 சிஎம் 2026' என வைத்திருந்தார் இயக்குனர் வெங்கட் பிரபு. அதைத் தற்போது தவெகவினர், விஜய் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அன்றே கணித்தார் வெங்கட் பிரபு, என அவரைப் பாராட்டியும், நன்றியும் தெரிவித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !