'வாழ-2' ஓட்டம் நிறைவுக்கு வருகிறது : ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
மலையாளத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சிறிய பட்ஜெட்டில், அறிமுகம் இல்லாத நடிகர்கள் நடித்து வெளியான திரைப்படம் 'வாழ 2'. ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற 'வாழ' படத்தின் இரண்டாம் பாகமாக இது வெளியானது. இந்த இரண்டு படங்களையும் தயாரித்து, அதன் கதையை எழுதியவர் 'குருவாயூர் அம்பல நடையில்' பட இயக்குனர் விபின் தாஸ்..
இந்த இரண்டாம் பாகம் தற்போது வரை உலக அளவில் 220 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், இப்படம் மே 9ம் தேதி முதல் ஓடிடி தளமான ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
தற்போது மலையாளத்தில் அதிகபட்சமாக 300 கோடி வசூலித்து லோகா சாப்டர் 1 சந்திரா படம் முதல் இடத்தில் இருக்கிறது. அதனை தொடர்ந்து எல் 2 ; எம்புரான், மஞ்சும்மல் பாய்ஸ், தொடரும் ஆகிய படங்கள் இருக்கின்றன. லோகா சாதனையை இந்த படம் தொட முடியாது என்றாலும் ஒட்டி ரிலீஸிற்குள் மற்ற மூன்று படங்களின் சாதனைகளை தொடவோ அல்லது முறியடித்து இரண்டாவது இடத்தைப் பிடிக்கவோ இப்படத்திற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்றே தெரிகிறது.