மீண்டும், மீண்டும் கதை நாயகியாக கீர்த்தி சுரேஷ் : இந்தமுறையாவது வெற்றி கிடைக்குமா?
இன்றைய தமிழ் சினிமா இளம் ஹீரோயின்களில் தேசிய விருது பெற்றவர் கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் படத்துக்காக தேசிய விருது பெற்றபின் அவர் சினிமா வாழ்க்கையும் மாறிவிட்டது. வழக்கமான கமர்ஷியல் ஹீரோயின் பாதையில் இருந்து விலகி, அழுத்தமான கேரக்டர், பெரிய படங்களில் நடிக்க தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் கவனம் செலுத்தினார். அப்படி அவர் நடித்த சாணிக் காயிதம், பென்குயின், மிஸ் இந்தியா, ரகு தாத்தா, ரீவால்வார் ரீட்டா போன்ற படங்கள் பெரிய வரவேற்பை, வெற்றியை பெறவில்லை. ஆனாலும், அந்த ஜானரில் தொடர்ந்து நடிக்கிறார். அப்படி அவர் நடிக்கும் படம் சத்தியவான் சாவித்ரி. பிரவீன் எஸ்.விஜய் இயக்கும் இந்த படத்தில் அவர் வக்கீலாக வருகிறார். அவர் சீனியராக மிஷ்கின் வருகிறார். கோர்ட் டிராமாவாக படம் செல்கிறது.
இரண்டு பேருக்குமான போட்டியே கதை என்று கூறப்படுகிறது. இதில் கீர்த்தி சுரேஷ் ஜோடி யார் என்று சொல்லப்படவில்லை. தமிழில் அவர் வெற்றி கொடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தெலுங்கில் தசரா படத்துக்குபின் வெற்றி கிடைக்கவில்லை. இந்நிலையில் சத்தியவான் சாவித்ரியை பெரிதும் நம்பி இருக்கிறார். இந்த படத்துக்கு பின்னும் அவர் முன்னணி ஹீரோ படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை.