sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 13, 2025 ,ஆவணி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

சத்குருவின் ஆனந்த அலை

/

ஒருவனுக்கு ஒருத்தி என்பது இந்தக் காலத்திற்கு பொருந்துமா?

/

ஒருவனுக்கு ஒருத்தி என்பது இந்தக் காலத்திற்கு பொருந்துமா?

ஒருவனுக்கு ஒருத்தி என்பது இந்தக் காலத்திற்கு பொருந்துமா?

ஒருவனுக்கு ஒருத்தி என்பது இந்தக் காலத்திற்கு பொருந்துமா?

6


PUBLISHED ON : ஜூலை 22, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூலை 22, 2025 12:00 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சமீபத்தில் நடந்த இளைஞரும் உண்மையும் நிகழ்ச்சியில், JNU கல்லூரி மாணவர் ஒருவர், ஒருவனுக்கு ஒருத்தி என்பது இந்தக் காலத்திற்கு பொருந்துமா என்று கேட்கிறார்.

கேள்வியாளர் : சத்குரு, எனக்கு முன்பு இந்த நம்பிக்கை இருந்தது, என்னிடம் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற நம்பிக்கையே வளர்க்கப்பட்டது. ஆனால் இன்று நான் பார்க்கும்போது, அப்படிப்பட்ட உறவுகள் இல்லாததுபோல் தெரிகிறது. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


சத்குரு: JNU கல்லூரியில் இது இல்லாமல் போயிருக்கலாம், ஆனால் உலகின் பிற பகுதிகளில் இது இன்னும் மறைந்துவிடவில்லை. நீங்கள் அமெரிக்கா சென்றாலும்கூட, அவர்கள் கட்டற்ற உடலுறவு கொள்ளும் சமுதாயமாகத் தெரிந்தாலும், அங்கும் மக்கள் திருமணம் செய்யும்போது, அது வாழ்நாள் முழுவதற்குமானது என்றுதான் நம்புகிறார்கள். ஆனால் 2 வருடங்களில் அவர்களுக்கு வாழ்க்கை முடிந்துவிடுகிறது - அது வேறு விஷயம்! ஆனால் அவர்கள் திருமணம் செய்யும்போது, அது வாழ்நாள் முழுவதற்கும் என்றுதான் நம்புகிறார்கள். அதனால்தான் வைரங்களில் முதலீடு செய்கிறார்கள், அது வாழ்நாள் முழுவதுக்குமான முதலீடு என்றே நம்புகிறார்கள்.

துரதிர்ஷ்டவசமாக, பல்வேறு காரணங்களினால் உறவுகள் தவறாகிப் போகின்றன. இதற்கான ஒரு காரணம் என்னவென்றால், அவர்கள் தங்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில்தான் ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையின் முற்பகுதியில், இளமையாக, 17 - 18 வயதாக இருக்கும்போது, அவர்களின் ஆளுமைத்தன்மை இறுகிப்போகாமல் நெகிழ்வாக இருக்கிறது, அப்போது இருவரும் வெகுசுலபமாக ஒன்றாகிவிடுவர்.

இப்போது அவர்கள் 30 வயதில் சந்திக்கிறார்கள், இருவரும் இறுகி, இருவேறு பாறைகளைப் போல இருக்கிறார்கள். நான் பொதுவாக பார்ப்பது என்னவென்றால், இளைஞர்கள் திருமணம் செய்தால் அவர்கள் அதில் நிலைப்பார்கள். 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் திருமணம் செய்தாலும் அவர்கள் அதில் நிலைப்பார்கள், ஏனென்றால் அவர்கள் மீண்டும் மென்மையாகியிருப்பார்கள். ஆனால் 30 வயது முதல் 50 வயதுவரை அவர்கள் சற்று பாறையைப் போல இறுகியிருக்கிறார்கள். அவர்களுடைய ஆளுமைத்தன்மை வலுவாக இருப்பதால் உரசல்கள் ஏற்படுகிறது. அவர்கள் விவேகமானவர்களாக இருந்தால், அதையும் கடந்த ஒரு ஒற்றுமையைக் கண்டறிவார்கள்.

ஒருவனுக்கு ஒருத்தியோ, பலரோ, அல்லது வேறு எப்படியோ இருந்தாலும், நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம், நீங்களும் நானும் இங்கு இருப்பது, ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்ததால்தான். அவர்கள் பெற்றோர்களாக இருப்பதால், 'அவர்கள் நேசிப்பதில்லை, உடலுறவு கொள்வதில்லை, ஒரு புரோகிதர் மந்திரம் சொன்னதால் நீங்கள் பிறந்துவிட்டீர்கள்' என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அப்படியில்லை. சிலருக்கு உடல்ரீதியான தேவை இருக்கிறது, எனவே அவர்கள் அதை திருமணம் மூலமாக கையாண்டார்கள், அதனால்தான் நாம் இங்கு இருக்கிறோம்.

உங்கள் வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், உங்களுக்கு 18 வயதாக இருக்கும்போது, நீங்கள் திருமணத்தை எதிர்க்கலாம். ஆனால் உங்களுக்கு 3 வயதாக இருந்தபோது நீங்கள் திருமணத்தை ஆதரித்தீர்கள் - உங்கள் பெற்றோருடைய திருமணத்தை! உங்கள் பெற்றோருக்கு நிலையான ஒரு திருமண வாழ்வு அமைந்தது சந்தோஷமாக இருந்தது அல்லவா? நீங்கள் 18 வயதாக இருக்கும்போது, சுதந்திரமாக உடலுறவு கொள்ளவும், திருமணம் செய்யாதிருக்கவும் விரும்புவீர்கள். ஆனால் 50 அல்லது 55 வயதாகும்போது, மீண்டும் நிலையான உறவை நாடுவீர்கள்.

இது உங்கள் வாழ்க்கை, எனவே உணர்வுரீதியாக நீங்கள் எப்போதும் யாரையாவது தேடும்படியான வாழ்க்கை வாழ விரும்புகிறீர்களா, அல்லது ஒருவிதத்தில் நிலையான வாழ்க்கை அமைத்து, அதன்மூலம் உங்கள் நேரத்தையும் புத்திசாலித்தனத்தையும் வேறொன்றை உருவாக்க பயன்படுத்தும் விதமாய் வாழ விரும்புகிறீர்களா? நீங்கள் தினமும் யாரோ ஒருவரைத் தேடி அலைவதைக் காட்டிலும், உங்கள் உணர்வுகளுக்கும் உடலுக்கும் நிலையான ஏற்பாடுகள் இருந்தால், உங்கள் புத்திசாலித்தனம் இன்னும் மேலான நிலையில் செயல்படும்.

இதை நான் சிறுமைப்படுத்த விரும்பவில்லை, ஆனால் அமெரிக்காவில், 40 - 45 வயதிற்கு மேலான பெண்கள், அவர்கள் அற்புதமானவர்கள், ஆனால் ஏதோ பாருக்குச் சென்று காத்திருப்பார்கள் - இந்நாட்களில் எல்லாம் ஆன்லைனில் செய்கிறார்கள் - ஆனால் மற்றபடி, இன்றும் அவர்களுக்கு யாரோ ஒருவரின் துணை தேவைப்படுவதால் தங்களை யாராவது கூட்டிச்செல்ல வேண்டுமென்று காத்திருப்பார்கள்.

இது மிகவும் கொடூரமானது என்றே நான் நினைக்கிறேன். சரியான சூழ்நிலையில், 45 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண் அன்புடனும் மரியாதையுடனும் நடத்தப்பட வேண்டும், ஆனால் முன்பின் தெரியாத ஒரு ஆணை சந்திக்க அவள் அங்கு அமர்ந்திருக்கப் போகிறாள், சந்தித்தபின் அவன் தனக்கு ஏதாவது பானம் அல்லது உணவு வாங்கச்செல்லும் அடுத்த 10 நிமிடங்களில் அவனைப்பற்றி அவள் முடிவெடுக்கப் போகிறாள்.

அப்படியானால் எல்லோரும் அதே போக்கில் செல்வார்கள் என்று கிடையாது, ஆனால் சமுதாயத்தின் கட்டமைப்பை உடைப்பதற்கு முன்பாக, நீங்கள் மக்களில் பெரும்பகுதியினரின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும். தற்போது இருக்கும் கட்டமைப்பைவிட மேலான கட்டமைப்பை நம்மால் கொண்டுவர முடியுமா என்று நீங்கள் சிந்திக்க வேண்டும். நம் வாழ்வின் எந்தவொரு கட்டத்திலும், சமுதாய கட்டமைப்பு, அரசியல் கட்டமைப்பு, அல்லது சமுதாயத்தின் மனோரீதியான கட்டமைப்பை உடைக்கும்முன், அதைவிட மேலான மாற்றுமுறை நம்மிடம் இருக்கிறதா என்று நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். மாற்றுமுறை இல்லாமல், தற்போது ஓரளவு நல்லபடியாக இயங்கிவரும் சமுதாயக் கட்டமைப்பை உடைத்தால், எல்லாம் கைமீறிப் போய்விடும்.






      Dinamalar
      Follow us