குழந்தைகளின் கையால் வழங்குங்கள்

சத்தியத்திலேயே விடாப்பிடியாக பிடிவாதமாய் நின்றால் தான், எதிராளியின் மனதையும் சத்தியத்தின் பக்கம் திருப்ப முடியும். இவ்விஷயத்தை கையாளுபவர் சத்தியத்தில் அசைக்க முடியாத நம்பிக்கையுடையவராக இருக்க வேண்டும்.பக்தி மார்க்கத்தில் குருட்டு நம்பிக்கைகள் மலிந்து கிடக்கின்றன. நம்நாட்டிலும் மட்டுமின்றி உலக சமயங்களில் எல்லாம் மூடநம்பிக்கைகள் நிரம்பியுள்ளன. ஆனால், உண்மையான ஆன்மிக வாழ்வில் உயிர்களை வருத்தும் செயலுக்கு இடமேயில்லை. அகிம்சை நெறியில் வாழ்வதே கடவுளுக்கு உகந்ததாகும்.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பிடி தானியத்தை அன்றாடம் தானமாக அளிப்பதை கடமையாக வைத்துக்கொள்ள வேண்டும். அதையும் வீட்டில் உள்ள சிறு குழந்தையின் கையால் வழங்கும்படி செய்வது மிகவும் நல்லது. ஏனென்றால், அப்போது தான் அவர்களுக்கு இயல்பிலேயே தானதருமம் செய்யும் குணம் உண்டாகும். ண பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வேலை செய்யக்கூடாது. உழைப்பிற்காகவே உழைக்கும் தன்மை நம்மிடையே பரவ வேண்டும். இல்லாவிட்டால் நாம் ஏமாற்ற ஆரம்பித்து விடுவோம். பணம் நாம் உழைப்பதற்கு கொடுக்கும் இரண்டாவது விஷயமே அன்றி, அதற்காகவே உழைப்பது என்பது வேண்டாமே.

-வினோபாஜி