/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
சத்யசாய்
/
பக்தியின் அடிப்படை சத்தியம்
/
பக்தியின் அடிப்படை சத்தியம்
ADDED : ஆக 10, 2008 03:57 PM

<P>ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கைப் பயணம் எங்கு செல்கிறது என்றே தெரியாமலேயே சென்று கொண்டிருக்கிறார்கள். எல்லையற்ற வாழ்க்கை எவ்விடத்திலும் முடிவுறப்போவதில்லை. ஆகவே, உங்கள் பயணம் ஆன்மாவைத் தேடுவதாக வைத்துக்கொள்ளுங்கள். எந்த நேரத்தில் ஆத்மாவை அறிந்து கொள்கிறீர்களோ, அவ் விடத்தில் பயணத்தை முடித்துவிடுங்கள். </P>
<P>அழகான பொருட்களைக் காணும்போது மகிழ்ச்சி கொள்ளும் மனம், அது அழியும்போது துன்பப்படுகிறது. இது தேவையில்லாதது. அழகான பொருளால் தற்காலிகமான மகிழ்ச்சியை மட்டுமே தரமுடியும். நிரந்தரமான பொருளால் மட்டுமே, நிலையான மகிழ்ச்சி கிடைக்கும். உலகில் கடவுள் ஒருவரைத்தவிர, நிரந்தரமான பொருள் என்று எதுவுமே கிடையாது. ஆகவே, கடவுள் மீது பக்தி கொண்டு, அவரை அடைந்து நிரந்தர இன்பம் காணுங்கள்.</P>
<P>காலைவேளையில் ஒரு செடியில் ரோஜா மலர்கிறது. அதனை பார்க்கும்போது மனம் மகிழும். மறுநாள் காலையில் அதே மலர் இதழ்களை உதிர்த்து குச்சியாக நிற்கும்போது, முன்பிருந்த மகிழ்ச்சி இருப்பதில்லை. நாம் மகிழ வேண்டும் என்பதற்காக ரோஜா, உதிராமல் அப்படியே இருப்பதில்லை. அது தன்னிலையில் எப்போதும்போல் செயல்படுகிறது. ஆகவே, தற்காலிக இன்பம் தரும் பொருள் மீது ஆசை கொள்ளாதீர்கள்.</P>
<P>சத்தியமே பேச வேண்டும். சத்திய வழியில் நடக்க வேண்டும். அதுவே பக்திக்கு மிகவும் அடிப்படையான விஷயம்.</P>