தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/குளவியால் குழப்பம்

குளவியால் குழப்பம்

குளவியால் குழப்பம்


ADDED : ஜூன் 27, 2024 01:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 27, 2024 01:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சீதை அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டாள். அங்குள்ள மரத்தில் குளவி கூடு கட்டியிருந்தது.

அதில் இருந்த புழு, தாய்க்குளவியை நினைத்தபடியே இருந்தது. மூன்றே நாளில் புழுவிற்கு இறக்கை முளைத்து குளவியாக மாறி பறந்தது. அதை பார்த்த சீதை அழுதாள். அருகில் இருந்த அரக்கி திரிசடை,''ஏன் குளவியைக் கண்டு அழுகிறீர்கள்?'' எனக் கேட்டாள்.

''மூன்று நாளாக கூட்டிலிருந்த புழு, தன் தாயையே நினைத்து குளவியாக மாறியதைப் பார்த்து அழுகை வந்தது'' என்றாள் சீதை.

''இதில் அழுவதற்கு என்ன இருக்கிறது?” எனக் கேட்டாள் திரிசடை.

'' தாய்க்குளவியை சிந்தித்த புழு மூன்று நாளில் குளவியானது போல, ராமனையே சிந்திக்கும் நானும் அவராக மாறி விடுவேனோ எனக் கவலையாக இருக்கு'' என்றாள்.

அதற்கு திரிசடையும், ''கவலை வேண்டாம் தாயே! ஒருவேளை அப்படி நடந்தால், உங்களையே சிந்தித்திருக்கும் ராமரும் அங்கு சீதையாக மாறி இருப்பார்'' எனச் சொல்லிச் சிரித்தாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us