தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மே 28, 2026 10:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 10:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராதிகா.எம், பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம்: பிறந்த நாளில் தானம் செய்தால்...

முன்னோர், குலதெய்வத்தின் ஆசி நிச்சயம் கிடைக்கும்.

லட்சுமி.ஆர், பூவரசன்குப்பம், விழுப்புரம்: வீட்டில் கிணறு இருந்தால் தினமும் பூஜை செய்யணுமா?

@வேண்டாம். ஆடி 18 அன்று பூஜை செய்யுங்கள்.

ஹன்ஷிகா.வி, ஊட்டி, நீலகிரி: வீட்டு வாசலில் நல்ல பாம்பு படம் எடுத்தது. பரிகாரம் உண்டா...

செவ்வாயன்று முருகன் கோயிலில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.

பிரனிக்கா.ஏ, திருமங்கலம், மதுரை: சுபம், லாபம் என எழுதுவது ஏன்?

இதை எழுதி விநாயகரை வழிபடுங்கள். தடை விலகி லாபம் பெருகும்.

கவுஷிகா.மா, மேலுார், துாத்துக்குடி: விட்டுப் போன தொழிலை தொடங்க நாள் பார்க்கணுமா?

நல்ல நாள் பார்த்து கணபதி ஹோமம் நடத்துங்கள்.

மோனிகா.ரா, ராமமூர்த்தி நகர், பெங்களூரு: யானையிடம் ஆசி பெற்றால்...

யானையிடம் (விநாயகர், மகாலட்சுமி) ஆசி பெற்றால் தடை விலகி செல்வம் பெருகும்.

சஷ்டிகா.பி, கம்பம், தேனி: பிறந்த குழந்தைக்கு திருஷ்டி விலக சிதறு தேங்காய் உடைக்கலாமா?

ஒரு வயது வரை திருஷ்டி கழிக்க வேண்டாம்.

சசிரேகா.தா, பேயன்குழி, கன்னியாகுமரி: அர்ச்சனை தேங்காய் அழுகி விட்டது. என்ன செய்வது?

வருந்த வேண்டாம். முற்றின தேங்காயால் அர்ச்சனை செய்யுங்கள்.

தன்ஷிகா.கே, ஸ்ரீமுஷ்ணம், கடலுார்: வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்யலாமா?

உங்களை விட வயதில் குறைவான பெண்ணை திருமணம் செய்யுங்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us