தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்

கேளுங்க சொல்கிறோம்


ADDED : மே 14, 2026 11:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2026 11:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லட்சுமி.மா, ஆலந்துார், செங்கல்பட்டு: *அதிகாலையில் மங்கள இசை கேட்டால்...

மகிழ்ச்சி, நிம்மதிக்கு வழிவகுக்கும்.

அருண்.கே, ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி: *வைகாசியில் புதிய வீட்டில் குடியேறலாமா...

குடியேறலாம். எல்லா சுபநிகழ்ச்சிக்கும் ஏற்ற மாதம் இது.

சொக்கன்.வி, சோழவந்தான், மதுரை: *பிரதமை திதியில், சுபநிகழ்ச்சி நடத்தலாமா?

கூடாது. நன்மை தரும் தேவதையின் சக்தி அன்று குறைவாக இருக்கும்.

ஷாலினி.பா, வேளச்சேரி, சென்னை: *வீட்டில் ஹோமம், யாகம் செய்தால்...

மழை பொழியும். விரும்பியது கிடைக்கும்.

பாரதி.நா, வீரபாண்டி, தேனி: *நான் விரதம் இருக்கும் போது கோயில் பிரசாதத்தை சாப்பிடலாமா?

சாப்பிடக் கூடாது. கடவுளை மட்டும் சிந்திப்பதே விரதம். பிரசாதத்தை பிறருக்கு கொடுங்கள்.



தினேஷ்.கா, புளியங்குடி, தென்காசி: *அதிர்ஷ்டம், பிராப்தம் - இரண்டும் ஒன்றா?

இல்லை. தெய்வ அருளால் கிடைப்பது அதிர்ஷ்டம். பிறக்கும் போதே நம்முடன் வருவது பிராப்தம்.

கார்த்திகா.எம், குளச்சல், கன்னியாகுமரி: *வெளிநாட்டுக்கு செல்லும் முயற்சியில் தடை வருகிறதே...

ஹனுமனுக்கு வடை மாலை சாத்துங்கள். நல்லதே நடக்கும்.

திவ்யா.ஸ்ரீ, அலகுமலை, திருப்பூர்: *முன்னோர் பெயரை வைக்காமல் குழந்தைக்கு வேறு பெயர் வைக்கலாமா...

முன்னோர் பெயருடன் நீங்கள் விரும்பும் பெயரையும் சேர்த்து வையுங்கள்.

ராம்.பா, ராமமூர்த்தி நகர், பெங்களூரு: *நல்லவர்களுக்கு அதிகத் துன்பம் ஏன்?

நெருப்பில் போட்ட தங்கம் மின்னும். அது போல துன்பத்தின் மூலம் நல்லவர்களை கடவுள் பக்குவப்படுத்துகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us