நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாத்திகவாதி ஒருவர், ''ஆண்டவர் இருப்பதை நம்பவில்லை. ஏன் தெரியுமா? கண்ணால் காணாத ஒன்றை எப்படி நம்புவது?'' எனக் கேட்டார்.
''இதயம் துடிப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?'' எனக் கேட்டார் ஆத்திகர்.
'' பார்த்தது கிடையாது'' என்றார்.
''இதயத்துடிப்பை உணர்ந்திருக்கிறீர்களா?''
''ஆம்... நெஞ்சில் கை வைக்கும் போது உணர்ந்திருக்கிறேன்''
''அதுபோலத்தான், ஆண்டவரை காண முடியாது. மனதால் உணர முடியும்'' என்றார்.